(2 Australia Post

விசில்ப்ளோவர்‌ புகாரளித்தல்‌

பொது நலன்‌ வெளிப்படுத்தல்‌ சட்டம்‌ 2013 (010 சட்டம்‌), பெருநிறுவனச்‌ சட்டம்‌ 2001(C₹h) (பெருநிறுவனச்‌ சட்டம்‌), அல்லது ௮ாவிதிப்பு நிர்வாகச்‌ சட்டம்‌ 1953 (Ch) (வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டம்‌) ஆகியவற்றின்படி ஆஸ்திரேலிய போஸ்ட்‌ குரூப்‌ (குரூப்‌) ஒரு விசில்ப்ளோவர்‌ உதவி எண்ணை நிறுவியுள்ளது.

பின்வருமாறு நீங்கள்‌ தற்போதோ அல்லது முன்பு பணியாற்றியவராக இருந்தாலும்‌ கூட, உங்களுக்குத்‌ தெரிந்ததை வெளிப்படுத்தலாம்‌:

குரூப்பின்‌ பணியாளர்‌;

APGக்கு பொருட்கள்‌ அல்லது சேவைகளை வழங்கும்‌ ஒப்பந்ததாரர்‌ (சம்பளம்‌ அல்லது சம்பளம்‌ இல்லாமல்‌);

குரூப்பிற்கு பொருட்கள்‌ அல்லது சேவைகளை வழங்கும்‌ ஒப்பந்ததாரரின்‌ பணியாளர்‌ அல்லது துணை ஒப்பந்ததாரர்‌;

குரூப்பின்‌ உரிமம்‌ பெற்ற தபால்‌ அலுவலக உரிமதாரர்‌;

குரூப்பின்‌ உரிமம்‌ பெற்ற தபால்‌ அலுவலகப்‌ பணியாளர்‌;

குரூப்பின்‌ அதிகாரி அல்லது உதவியாளர்‌; அல்லது மேலே கூறப்பட்ட பதவியில்‌ உள்ளவர்களின்‌ உறவினர்‌ அல்லது குடும்ப உறுப்பினர்‌;

உங்கள்‌ அக்கறை வாடிக்கையாளர்‌ புகாருடன்‌ தொடர்புடையதல்ல என்பதை நினைவில்‌ கொள்ளவும்‌;

உங்கள்‌ அக்கறை தனிப்பட்ட வேலை சம்பந்தமான விஷயத்துடன்‌ தொடர்புடையதல்ல என்பதை

நினைவில்‌ கொள்ளவும்‌;

குரூப்பில்‌ அல்லது குரூப்புடன்‌ தொடர்புடைய ஒருவரது கடுமையான நெறிமுறையற்ற, சட்டவிரோத அல்லது தவறான நடத்தை பற்றி உங்களுக்கு ஆட்சேபனை இருக்கும்‌ பட்சத்தில்‌.

வாடிக்கையாளர்‌ புகார்கள்‌

புகார்‌ தெரிவிக்க அல்லது குரூப்பின்‌ சேவைகள்‌ குறித்துப்‌ பதிவுசெய்திட வாடிக்கையாளர்கள்‌, வாடிக்கையாளர்‌

தொடர்பு மையத்தை தபால்‌, மின்னஞ்சல்‌, தொலைபேசி எண்‌ 13 76 78 அல்லது இணையவழியில்‌ பின்வரும்‌ பக்கத்தின்‌ மூலம்‌ தொடர்பு கொள்ளவும்‌ http5://auspost.com.au/about-us/corporate-information/complaints-and- feedback#letter

விசில்ப்ளோவர்‌ உதவி எண்‌ புகார்களுக்குள்‌ வராதவை:

அஞ்சல்‌ அல்லது பார்சல்கள்‌ பட்டுவாடா; ஆஸ்திரேலியா போஸ்ட்‌ வசதியின்‌ மூலம்‌ பெறப்பட்ட அஞ்சல்‌ அல்லது பெறப்பட்ட சேவை; அல்லது

வாடிக்கையாளர்கள்‌ அல்லது பொது மக்களால்‌ கவனிக்கப்படும்‌ ஆஸ்திரேலியா போஸ்ட்‌ ஊழியர்களின்‌

நடத்தை. அதாவது ஓட்டுநர்‌ குற்றங்களைப்‌ புகாரளித்தல்‌.

அனைத்து வாடிக்கையாளர்‌ புகார்களும்‌ பிரத்யேக வாடிக்கையாளர்‌ தொடர்புக்‌ குழு சேனல்களைப்‌ பயன்படுத்தி

செய்யப்பட வேண்டும்‌ என்பது குரூப்பின்‌ விருப்பம்‌ என்றாலும்‌, விசில்ப்ளோவர்‌ தகவல்‌ தொடர்பு சேனல்கள்‌

மூலம்‌ புகார்‌ அளிக்கப்பட்டாலும்‌, சம்பந்தப்பட்ட புகார்கள்‌ நடவடிக்கை எடுக்கும்‌ குழுவுக்கு அனுப்பப்படும்‌.

பக்கம்‌ 1

தனிப்பட்ட வேலை தொடர்பான விஷயங்கள்‌

மேலும்‌ இது தொடர்பானவை:

குரூப்பின்‌ ஒரு நபரின்‌ தற்போதைய அல்லது முன்னாள்‌ வேலை தொடர்பான தனிப்பட்ட விஷயம்‌;

தனிப்பட்ட நபர்களுடன்‌ தொடர்புடைய பாகுபாடு, துன்புறுத்தல்‌ அல்லது கொடுமைப்படுத்துதல்‌ (அத்தகைய நடவடிக்கைகள்‌ வெளிப்படுத்தியதற்கு பழிவாங்கும்‌ வகையில்‌ இருந்தால்‌ தவிர) போன்ற பொருத்தமற்ற நடத்தை ; அல்லது

குரூப்பிற்கு பெரிய தாக்கங்களை ஏற்படுத்தாத மற்ற தீவிரமற்ற மற்றும்‌ முறையற்ற தவறான நடத்தை சிக்கல்கள்‌,

மிகவும்‌ சரியான முறையில்‌ நிர்வகிக்கப்படக்கூடிய அதற்கென இருக்கும்‌ தொடர்புடைய கொள்கையின்‌ கீழ்‌ அவைகள்‌ புகாரளிக்கப்பட வேண்டும்‌.

தனிப்பட்ட நபருடன்‌ தொடர்புடைய துன்புறுத்தல்‌, பாகுபாடு அல்லது கொடுமைப்படுத்துதல்‌ போன்ற புகார்களுக்கு, HDB உதவி எண்ணில்‌ தொடர்பு கொள்ளவும்॥DBMatters@auspost.com.au அல்லது 1800 641 535-க்கு அழைக்கவும்‌;

பிற தனிப்பட்ட வேலை தொடர்பான விஷயங்களுக்கு, உங்கள்‌ HR பிரதிநிதி அல்லது அதற்கான

தலைவரைப்‌ பார்க்கவும்‌.

இருப்பினும்‌, வாடிக்கையாளர்‌ புகார்களைப்‌ போலவே, எங்கள்‌ விசில்ப்ளோவர்‌ தகவல்தொடர்பு சேனல்கள்‌ மூலம்‌

தனிப்பட்ட வேலை தொடர்பான ஆட்சேபனைகள்‌ வரும்‌ பட்சத்தில்‌, அதைக்‌ கையாள &76-க்குள்‌ உள்ள

சம்பந்தப்பட்ட தொடர்புடைய குழுவின்‌ பார்வைக்கு நாங்கள்‌ அனுப்பிவைப்போம்‌.

பாதுகாக்கப்புடன்‌ வெளிப்படுத்தல்‌ என்றால்‌ என்ன?

ஒரு பணியாளராகப்‌ பங்கேற்பவர்‌ அல்லது வேறொரு முகமையின்‌ பொது அதிகாரி கடுமையான தவறு, தவறான நடத்தை அல்லது முறையற்று விவகாரங்களை அல்லது சூழல்களைக்‌ கையாண்டதாகச்‌ சந்தேகிப்பதற்கு முகாந்திரம்‌ உள்ளவர்‌ எனில்‌ ஒரு பொதுநலன்‌ கருதிய வெளிப்படுத்தலாகவோ அலது விசில்ப்ளோவர்‌

வெளிப்படுத்தலாகவோ அது பாதுகாக்கப்படலாம்‌. இதில்‌ பின்வருவன அடங்கும்‌:

ஆஸ்திரேலிய அல்லது வெளிநாட்டுச்‌ சட்டம்‌, ஒழுங்குமுறை அல்லது விதிகளை மீறக்கூடிய நடத்தை அல்லது நடைமுறைகள்‌ (திருட்டு, போதைப்பொருள்‌ விற்பனை அல்லது போதைப்பொருள்‌ பயன்பாடு, சட்டவிரோதச்‌ சேதங்கள்‌ போன்றவை);

ஊழல்‌ அல்லது மோசடி செய்தல்‌ (நிதியைத்‌ தவறாகப்‌ பயன்படுத்துதல்‌, இலஞ்சம்‌, தவறான செல்வாக்கு, பொய்யான அல்லது தவறான தகவல்களைப்‌ பரப்புவது போன்றவை);

தவறான நிர்வாகம்‌ அல்லது ஆஸ்திரேலியா போஸ்டின்‌ வளங்களைக்‌ கணிசமான முறையில்‌ தவறாக நிர்வகிப்பது அல்லது வீணாக்குவது (வேலைக்காக வழங்கப்பட்ட தொலைபேசியை அதிகப்படியான தனிப்பட்ட விஷயங்களுககோகப்‌ பயன்படுத்துவது, தனிப்பட்ட வாகனங்களுக்கென எரிபொருள்‌ அட்டைகளை அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்காக உபயோகிப்பது, குரூப்பின்‌ ஆதாரங்கள்‌ / தகவல்களை தனிப்பட்ட இலாபத்திற்காகப்‌ பயன்படுத்துதல்‌ போன்றவை);

சுற்றுச்சூழல்‌ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு செய்யும்‌ விதமாகச்‌ சுகாதாரம்‌ அல்லது பாதுகாப்பிற்கு கணிசமான ஆபத்து அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்தை வெளிப்படுத்தும்‌ விதமாக நடந்து கொள்வது;

மனித உரிமைகள்‌ மீதான சாத்தியமான மீறல்களை வெளிப்படுத்தும்படி நடந்துகொள்வது;

குழுவிற்கு கடுமையான நிதி அல்லது நிதிசாரா இழப்பு அல்லது அதன்‌ நற்பெயர்‌ மற்றும்‌ வணிக முத்திரைக்குச்‌ சேதம்‌ விளைவிக்கும்படி அல்லது நிதி அமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்படி நடந்துகொள்வது; அல்லது

குரூப்‌ நெறிமுறைகளில்‌ கடுமையான அத்துமீறல்‌.

பக்கம்‌ 2

ஒரு விசில்ப்ளோவர்‌ வெளிப்படுத்தலை எவ்வாறு மேற்கொள்வது

நீங்கள்‌ ஆஸ்திரேலியா போஸ்ட்‌ குழுமத்தின்‌ தற்போதைய அல்லது முன்பு பணியாற்றியவராகவோ அல்லது மற்றொரு முகமையின்‌ பொது அதிகாரியாகவோ இருந்தால்‌, சந்தேகத்திற்குரிய தீவிர தவறு, கெட்ட நடத்தை அல்லது நன்னடத்தையற்ற சூழல்‌ அல்லது சூழ்நிலைகள்‌ குறித்து புகாரளிக்க விரும்பினால்‌, இல்‌ உள்ள விசில்ப்ளோவர்‌ உதவி எண்‌ 1800 799 353 (ஆஸ்திரேலியா) அல்லது *61 3 8603 5364 (வெளிநாடுகளில்‌ இருப்பின்‌) மூலம்‌ வெளிப்படுத்தலாம்‌.

விசில்ப்ளோவர்‌ உதவி எண்‌ வெளிநபர்களால்‌ நிர்வகிக்கப்படுகிறது, அவர்கள்‌ உங்கள்‌ புகார்களை ஆஸ்திரேலியா போஸ்ட்‌ குரூப்பின்‌ அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள்‌ .

பெருநிறுவனங்கள்‌ சட்டம்‌ அல்லது வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உங்கள்‌ புகார்‌ ஒரு 110 அல்லது வெளிப்படுத்தல்‌ எனில்‌ (அவ்வாறு கருதப்பட்டால்‌), அது எங்கள்‌ வெளிப்புறச்‌ சேவை வழங்குநரால்‌

பெறப்பட்டவுடன்‌, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தொடர்புடைய விசில்ப்ளோவர்‌ சட்டத்தின்படி கையாளப்படும்‌.

மாறாக நீங்கள்‌ ஆஸ்திரேலியா போஸ்ட்‌ குரூப்பின்‌ அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியை இந்த இணைப்பு மூலம்‌ நேரடியாகத்‌ தொடர்பு கொள்ளலாம்‌ Aப5tralia Post Group Whistleblower Portal

பக்கம்‌ 3

உள்ளடக்க வேண்டிய தகவல்‌

ஒரு வெளிப்படுத்தலை நீங்கள்‌ வழங்கும்போது, ஆஸ்திரேலியா போஸ்ட்‌ குழுவானது சிறந்த நடவடிக்கையைத்‌ தீர்மானிப்பதில்‌ உதவ, பின்வரும்‌ விவரங்களை முடிந்தவரை வழங்குவதைக்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌:

உ. உங்கள்‌ பெயர்‌ மற்றும்‌ தொடர்பு விவரங்கள்‌ (பரிந்துரை மட்டுமே, இருப்பினும்‌ அடையாளம்‌ தெரியாத ஒருவராகவும்‌ வெளிப்படுத்தலைச்‌ செய்யலாம்‌);

உ. தவறின்‌ தன்மை;

உ. தவறு செய்ததாக நீங்கள்‌ கருதும்‌ நபரின்‌ விவரங்கள்‌ (அந்த நபர்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட்ட சேவை வழங்குநராக இருந்தால்‌, வழங்குநர்‌ விவரங்கள்‌ மற்றும்‌ அவரது இருப்பிடம்‌);

எப்போது, எங்கு தவறு நடந்தது;

உ. தவறான செயலைச்‌ சுற்றி நடந்த ஏதேனும்‌ தொடர்புடைய நிகழ்வுகள்‌;

உ. அந்தத்‌ தவறான செயலை அறிந்த மற்றவர்கள்‌ அல்லது அதில்‌ ஈடுபட்டவர்கள்‌;

உ. உரிமைகோரல்களைச்‌ சரிபார்க்கக்கூடிய மற்ற எவரும்‌ இருப்பின்‌;

நடந்த தவறுக்குப்‌ பதிலாக நீங்கள்‌ ஏதாவது செய்திருந்தால்‌;

உ. பழிவாங்குதலுக்கான சாத்தியங்கள்‌ இருப்பது பற்றி நீங்கள்‌ கவலைப்பட்டால்‌;

உ. ஏதேனும்‌ கூடுதல்‌ தகவல்கள்‌ இருப்பின்‌ (எ.கா. ஆவணங்கள்‌, குறிப்புகள்‌).

வழங்கப்பட்ட தகவல்கள்‌ தெளிவாகவும்‌ உண்மையாகவும்‌ இருக்க வேண்டும்‌. ஊகங்கள்‌, தனிப்பட்ட தாக்குதல்கள்‌

மற்றும்‌ உணர்ச்சிவசமான மொழி ஆகியவற்றைத்‌ தவிர்க்கவும்‌. உங்கள்‌ வெளிப்படுத்துதலைக்‌ கையாளுதல்‌

உங்கள்‌ வெளிப்படுத்தலை அறிவித்த பிறகு, அந்த வெளிப்படுத்தல்‌ PID சட்டத்தின்‌ கீழ்‌ பொது நலன்‌ வெளிப்படுத்தலாகக்‌ கருதி பாதுகாக்கப்படுமா அல்லது பெருநிறுவனச்‌ சட்டம்‌ அல்லது வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு விசில்ப்ளோவர்‌ வெளிப்படுத்தலாகப்‌ பாதுகாக்கப்படுமா என்பதை விசில்ப்ளோவர்‌ குழு மதிப்பிடும்‌.

உங்களின்‌ வெளிப்படுத்தலுக்காக புலனாய்வாளர்களால்‌ எடுக்கப்படும்‌ எந்தவொரு முடிவும்‌ உங்களுக்குத்‌ தெரியப்படுத்தப்படும்‌. மேலும்‌ உங்கள்‌ அடையாளத்தை புலனாய்வாளருக்கு தெரிவிக்க விரும்புகிறீர்களா, இல்லையா என்பதைத்‌ தீர்மானிப்பதற்கான வாய்ப்பும்‌ வழங்கப்படும்‌. உங்கள்‌ அடையாளத்தை புலனாய்வாளருக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை என்றால்‌, உங்கள்‌ புகாரை விசாரிக்கும்‌ திறனை இது பாதிக்கலாம்‌.

பொது நலன்‌ கருதி PID சட்டத்தின்‌ கீழ்வரும்‌ வெளிப்படுத்தல்‌ அல்லது பெருநிறுவனச்‌ சட்டம்‌ அல்லது வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்‌ கீழோ விசில்ப்ளோவரின்‌ வெளிப்படுத்தல்‌ தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால்‌, வேறு எந்தக்‌ கொள்கையின்கீழ்‌ வருகிறது என்பதைப்‌ பரிசீலித்து, விசில்ப்ளோவர்‌ குழு இந்த விஷயத்தை பொருத்தமான குழுவிற்கு அனுப்பும்‌. மேலும்‌ புகாரைக்‌ (பொருத்தமானால்‌) கருத்தில்‌ கொண்டு விசாரிக்கவும்‌ செய்யும்‌.

PID சட்டம்‌, பெருநிறுவனச்‌ சட்டம்‌ மற்றும்‌ வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வரும்‌ பாதுகாப்புகள்‌

நீங்கள்‌ வெளிப்படுத்தக்கூடிய விஷயம்‌ 110 சட்டத்தின்‌ கீழ்‌ பொது நலன்‌ கருதி வெளிப்படுத்தல்‌ அல்லது பெருநிறுவனச்‌ சட்டம்‌ அல்லது வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்‌ கீழ்வரும்‌ விசில்ப்ளோவர்‌ வெளிப்படுத்தல்‌ என

தீர்மானிக்கப்பட்டால்‌, பின்வரும்‌ உரிமைகள்‌ உங்களுக்குப்‌ பொருந்தும்‌:

உ. உங்கள்‌ வெளிப்படுத்தல்‌ இரகசியமாகவும்‌ சரியான நேரத்திலும்‌ கையாளப்படும்‌,

பாதுகாக்கப்பட்ட வெளிப்படுத்தல்‌ தொடர்பாக உரிமையியல்‌, குற்றவியல்‌ மற்றும்‌ நிர்வாகப்‌ பொறுப்புகளில்‌ இருந்து உங்களுக்கு விலக்கும்‌ உள்ளது.

பக்கம்‌ 4

உ. உங்கள்‌ PIDயின்‌ அடிப்படையில்‌ உங்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும்‌ அல்லது செயல்படுத்தப்படும்‌ ஒப்பந்தத்‌ தீர்வுகளிலிருந்தும்‌ உங்களுக்குப்‌ பாதுகாப்பு உள்ளது. உ. வெளிப்படுத்தியதற்காக அல்லது வெளிப்படுத்தியவர்‌ என்ற சந்தேகத்தின்‌ பேரில்‌ செய்யப்படும்‌ தீங்கு அல்லது பழிவாங்கலில்‌ இருந்தும்‌ உங்களுக்கு பாதுகாப்பு உள்ளது. விசாரணை இறுதி செய்யப்பட்ட பிறகும்‌ இந்தப்‌ பாதுகாப்புகள்‌ மற்றும்‌ விலக்குகள்‌ தொடர்ந்து பயன்படுத்தப்படும்‌. இருப்பினும்‌, நீங்கள்‌ தெரிந்தே தவறான அல்லது தவறாக வழிநடத்தும்‌ தகவலை வெளிப்படுத்தினாலோ அல்லது உங்கள்‌ சொந்த தனிப்பட்ட தவறான செயலின்‌ விளைவுகள்‌ காரணமாக வெளிப்படுத்தியிருப்பது அடையாளம்‌ காணப்பட்டால்‌, விசில்ப்ளோவர்‌ சட்டங்கள்‌ உங்களைப்‌ பாதுகாக்காது.

உங்கள்‌ பொறுப்புகள்‌

PID சட்டம்‌, பெருநிறுவனச்‌ சட்டம்‌ அல்லது வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டத்தின்கீழ்‌ வெளிப்படுத்தும்‌ பணியாளர்களுக்கு பின்வரும்‌ பொறுப்புகள்‌ பொருந்தும்‌:

உ. தெரிந்தே பிழையான அல்லது தவறாக வழிநடத்தும்‌ தகவல்களைப்‌ புகாரளிக்க வேண்டாம்‌.

உ. உங்கள்‌ வெளிப்படுத்தல்‌ குறித்து கவனமாக இருந்து அதற்கான செயல்முறை முழுவதும்‌ இரகசியத்தை பாதுகாக்கவும்‌.

உ. விசாரணையின்போது தேவையான நியாயமான உதவியை வழங்கவும்‌.

உ. உங்கள்‌ வெளிப்படுத்தல்‌ தொடர்பாக ஏதேனும்‌ பிரச்சினைகளை நீங்கள்‌ எதிர்கொள்ளக்‌ கூடுமென்றாலோ அல்லது சாத்தியமான பழிவாங்கும்‌ நடவடிக்கை இருக்கலாம்‌ என்றாலோ உங்கள்‌ மேற்பார்வையாளர்‌, அதிகாரம்‌ பெற்ற அதிகாரி/தகுதியான பெறுநர்‌ அல்லது விசில்ப்ளோவர்‌ குழுவிடம்‌ எச்சரிக்கை செய்யவும்‌.

உ. தேவைப்பட்டால்‌ உங்களுக்கு வேண்டிய ஆதரவைத்‌ தேடுங்கள்‌.

உ. தேவைப்பட்டால்‌ இதன்‌ செயல்முறை மற்றும்‌ உரிமைகள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌ சம்பந்தமாக தனிப்பட்ட

சட்ட ஆலோசனையைப்‌ பெறவும்‌. பெயரின்றி வெளிப்படுத்தல்‌

ஒரு வெளிப்படுத்தலை மேற்கொள்ளும்போது, உங்களை அடையாளங்களைக்‌ கூறியோ அல்லது அடையாளம்‌ ஏதுமின்றியோ வெளிப்படுத்தலைச்‌ செய்வதை நீங்கள்‌ தேர்ந்தெடுக்கலாம்‌.

இருப்பினும்‌, ஒரு சில சூழ்நிலைகளில்‌ அடையாளப்படுத்தாமல்‌ வெளிப்படுத்தல்‌ செய்வது கடினமாக இருக்கலாம்‌ அல்லது ஆஸ்திரேலியா போஸ்ட்டிற்கு நீங்கள்‌ வெளிப்படுத்த்தியதை விசாரிப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம்‌. நீங்கள்‌ அடையாளப்படுத்தாமல்‌ வெளிப்படுத்தலைத்‌ தேர்வுசெய்தால்‌, உங்கள்‌ தொடர்புகள்‌ ஏதும்‌ வழங்கவில்லை

என்றால்‌, செயல்முறை முழுவதும்‌ ஆஸ்திரேலியா போஸ்ட்‌ உங்களுடன்‌ தொடர்புகொள்வது கடினமாக இருக்கும்‌ என்பதையும்‌ நினைவில்‌ கொள்ளவும்‌.

கூடுதல்‌ தகவல்‌

PID சட்டம்‌: Public Interest Disclosure - Commonwealth Ombudsman

பெருநிறுவனச்‌ சட்டம்‌: https://asic.gov.au/about-asic/asic-investigations-and-enforcement/whistleblowin

வரிவிதிப்பு நிர்வாகச்‌ சட்டம்‌: https://WWw.ato.gov.au/general/gen/whistleblowers/

பக்கம்‌ 5